அகத்திணையியல்-நூற்பா-130 311
விளக்கம்
1 ["தலைவியை முன்பு அளித்த தெய்வம் இன்னும் தரும்" என்று தலைவன் தலைவியை முதல்நாள் கண்ட இடத்திற்குச் செல்லுதல்.
2 தலைவியைத் தலைவன் முன்பு போலத் தனித்து நின்றதை நேரில் காணுதல்.
3 தலைவியைத் தழுவுதல்.
4 தலைவியின் அழகைப் புகழ்தல்.
5 பாங்கியர்கூட்டத்தை அடையும்படிதலைவன் தலைவியை விடுத்தல்.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும் - ந. அ. 135
"சேறலில் தந்த தெய்வம் தரும்எனச் சேறல் காண்டல் சேர்தல் புகழ்தல் ஆயத்து உய்த்தலோடு ஐந்துஇடந் தலைஎன மேய பின்உறு புணர்ச்சியின் விரியே".
மா. அ. 27]
தந்த தெய்வம் தரும் எனச்சேறல்:
"என்அறி வால் வந்தது அன்றுஇது முன்னும்பின் னும்முயன்றால் மன்நெறி தந்தது இருந்தன்று தெய்வம் வருந்தல், நெஞ்சே மின்எறி செஞ்சடைக் கூத்தப் பிரான் வியன் தில்லைமுந்நீர்ப் பொன்எறி வார்துறை வாய்ச்சென்று மின்தோய் பொழில்இடத்தே.
எனவும், திரு. 49
[மனமே! கூத்தப்பிரான் தில்லைக் கடல்துறையை அடுத்த பொழிற்கண் தலைவியைக் கூடும் வாய்ப்பு: முன்னும் என்அறிவால் முயன்று பெற்றது அன்று; இன்னும் அவ்வாய்ப்பு அளித்த தெய்வம் நமக்குக் கூட்டுவிப்பதற்கு உள்ளது; ஆதலின் வருந்தாதே]