312                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     முத்துறக் காண்டல்:

 நேயத்த தாய்நென்னல் என்னைப்புணர்ந்து நெஞ்சம் நெகப்போய்
 ஆயத்த தாய்அமிழ் தாய்அணங் காய் அரன் அம்பலம்போல்
 தேயத்த தாய் என்தன் சிந்தைய தாய்த் தெரியின் பெரிதும்
  மாயத்த தாகி இதோ வந்து நின்றது என் மன் உயிரே.

 எனவும்,                                                  திரு.39
 

     [என் உயிர், நேற்று உள்ளம் நெகிழ்ச்சியுடையதாய் என்னைக்கூடி, பின்,
 நேயம் இல்லது போல என் நெஞ்சு உடையும்வகைப் பிரிந்துசென்று
 தன்தோழியர் ஆயத்தைக்கூடி, இன்பம் செய்தலின் அமிழ்தாய், துன்பம்
 செய்தலின் அணங்காய், புலப்பாட்டான் பொன்னம்பலம்போல ஒளியை
 உடையதாய், புலப்படாது வந்து என்மனத்தின்கண்ணதாய்
 ஆராயின் பெரிதும் மாயத்தை உடையதாய் இவ்விடத்து வந்து நிற்கின்றது.]

     முயங்கல்:

    "வேட்ட பொழுதின் அவைஅவை போலுமே
     தோட்டார் கதுப்பினாள் தோள்"                    குறள். 1105


 எனவும் வரும்.

 சுரும்பு உழு கூந்தலும், செவ்வாய் மழலையும் சோதிநுதல் அரும்பிய
 வேர்வும், அலமரு நோக்கும், அசைந்துஒசியும் கரும்புரு வச்சிலையும், நிலை
 சோரும் கலையும், கண்டு, விரும்பின மே, மன மே! களி கூர் இன்ப
 வெள்ளத்தையே. இதுவும் அது.                            அம்பி. 41

     [பூச்சூடிய கூந்தலை உடைய இத்தலைவியின் தோள்கள் எவ்வெவற்றை
 விரும்புகின்றனமோ, அவ்வப்பொருள்களாய் அமைந்து இன்பம் தருகின்றன.

     மனமே! தலைவியின் வண்டுகோதும் கூந்தல், மழலை மொழி,
 நெற்றியில் அரும்பிய வேர்வை, சுழலும் பார்வை,