அசைந்து தளரும் புருவவில், நிலைசோரும் ஆடை இவற்றை மனங்கொண்டு மகிழ்ச்சி மிகுதற்குக் காரணமான இன்ப வெள்ளத்தை விரும்பினோம்.]
புகழ்தல்:
"கனமே கருங்குழல், கங்குல்அன் றே; கண் கருவிளையின்
இனமே, குவளையும் நெய்தலும் அல்ல; இவர்க்கு இடையென்
மனமே, வளர்இள வஞ்சிஅன் றே;வஞ்ச மாறன்வைத்த
தனமே தனம்,கன கத்தட மேருச் சயிலமன்றே".
[தலைவியின் கூந்தல் மேகமே; இருள்அன்று; கண்கள் கருவிளையே, குவளையும் நெய்தலும் அல்ல; இடை என்மனமாகிய அருவப்பொருளே, வஞ்சிக்கொடி அன்று: தனம் மன்மதனுடைய செல்வக்குவியலே, மேருமலை அன்று.]
உடன்புணர் ஆயத்து உய்த்தல்:
"சூளாமணிஉம்பர்க்குஆயவன்சூழ்பொழில்தில்லைஅன்னாய்க்கு
ஆளாய் ஒழிந்ததுஎன் ஆருயிர் ஆரமிழ் தேஅணங்கே
தோளா மணியே பிணையே பலசொல்லி என்னைதுன்னும்
நாள்ஆர் மலர்ப்பொழில் வாய்எழில் ஆயம் நணுகுகவே".
எனவும் வரும்.
[அமிழ்தே! அணங்கே! துளைஇடாத மணியே! மான்பிணையே! பலசொல்லுவது ஏன்? தில்லைஅன்ன உனக்கு என் உயிர் அடிமையாய் விட்டது. நீ இனி, பொழிலிடத்துநின்தோழியர் குழாத்தை அடைவாயாக.]
இவற்றுள், தந்ததெய்வம் தரும் எனச் சேறல் ஆகிய ஒன்றும் தெய்வம் தெளிதற்கும், காண்டலும் முயங்கலும் புகழ்தலும் ஆகிய மூன்றும் கூடற்கும், ஆயத்து உய்த்தல் ஆகிய ஒன்றும் விடுத்தற்கும் உரியவாம்.
40
|
|
|
|