அகத்திணையியல்-நூற்பா-131                              315


 

     [ஒள்ளிய அணிகளையும் ஐம்பாலாகிய கூந்தலையும் உடைய தலைவி
 புனத்தைக் காவல் காக்கும் வாய்ப்பினை அளித்த கிளிகள் வெள்ளம் ஆகிய
 பல ஆண்டுகளை உடைய ஊழிக்கால வரையறைக்கு மேலும் நீண்ட காலம்
 வாழ்வனவாக.

     கிள்ளை வாழ்த்தல் போல்வன நச்சினார்க்கினியர் உரைத்தன.

[தொல். பொ. 102]

    "காம்புஇணை யால்களி மாமயி லால்கதிர் மாமணியால்
     வாம்பிணை யால்வல்லி ஒல்குத லால்மன்னும் அம்பலவன்
     பாம்பிணை யாக்குழை கொண்டோன் கயிலைப் பயில்புனமும்
     தேம்பிணைவார்குழலாள் எனத்தோன்றும் என்சிந்தனைக்கே".

திருக்கோவை 38
 

 எனவும்,

     [மூங்கில்களாலும் (தோள்) மயில்களாலும் (சாயல்) மணிகளாலும்
  (உடல்ஒளி) மான்களாலும் (விழி) தளரும் கொடிகளாலும் (இடை) பாம்பைக்
 காதணியாகக்கொண்ட சிவபெருமானுடைய கயிலைப் புனமும் என்
 உள்ளத்திற்குத் தலைவியாகவே காட்சி வழங்குகின்றது.]

      மன்னனை நினைந்து மின்னிடை மெலிதல்:

    "ஆவிஅன் னாய்கவ லேல்அக லேம்என்று அளித்துஒளித்த
     ஆவிஅன் னார்மிக்கு அவாவின ராய்க்கெழு மற்குஅழிவுற்று
     ஆவிஅன்னார்மன்னி ஆடுஇடம்சேர்வர்கொல்அம்பலத்துஎம்
     ஆவிஅன் னான்பயி லும்கயி லாயத்து அருவரையே".

 எனவும் வரும்.

திருக்கோவை 37
 

     [என் உயிர்போல்வாய்! நீ கவலைப்படாதே. உன்னை விட்டு நீங்கேன்
 என்று தண்ணளி செய்து போன என்உயிர் போன்ற தலைவர் என்னைக்
 கூடுதற்கு விதுப்புற்று, அம்பலத்தில் எம் உயிராக விளங்கும் சிவபெருமான்
 பயிலும் இக்கயிலாய மலைப்பகுதியில் என் உயிர்த்தோழியர் விளையாடும்
 இடத்திற்கு வந்து விடுவாரோ?]