தனிநிலை கண்டு தளர்வு அகன்று உரைத்தல்:
"தாதுஇவர் போதுகொய் யார்தையலார் அங்கைகூப்பநின்று
சோதி வரிப்பந்து அடியார் சுனைப்புனல் ஆடல்செய்யார்
போதுஇவர் கற்பக நாடுபுல் லென்னத்தம் பொன்அடிப்பாய்
யாதுஇவர் மாதவம் அம்பலத் தான்மலை எய்துதற்கே".
[தேவர் உலகம் பொலிவு அழிய அதனைவிடுத்து ஏதோ தவம் செய்யக் கருதுவாள்போல அம்பலத்தான் மலையை எய்திய நம்தலைவி, போதுகொய்யாது, தோழியர் போற்றப் பந்து ஆடாது, சுனையில் நீராடாது தனித்து நிற்கிறாள்.]
முன் நீங்கியவழித் தன்வருத்தமும் வேட்கையும் அவட்குக் கூறல்:
"நீங்கில் தெறூஉம் குறுகுங்கால் தண்எனும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்".
[தன்னைவிடுத்து அகன்றால் வருத்துதலும் தன்னை அணுகினால் குளிர்ச்சி தருதலும் உடைய புதியதொரு நெருப்பினை இவள் எவ்விடத்தில் இருந்து பெற்றுள்ளாள்?]
கூடற்கு அரிது என வாடி உரைத்தல்:
"காவிநின்று ஏர்தரு கண்டர்வண் தில்லைக்கண் ணார்கமலத்
தேவிஎன் றேஐயம் சென்றதுஅன் றேஅறி யச்சிறிது
மாஇயன் றன்னமென் நோக்கிநின் வாய்திற வாவிடின்என்
ஆவிஅன் றேஅமிழ் தேஅணங் கேஇன்று அழிகின்றதே".
(மான்போன்ற பார்வையினை உடையாய்! நீலகண்டருடைய தில்லையில் உள்ள திருமகளே நீ என்று என் உள்ளம்
|
|
|
|