அகத்திணையியல்-நூற்பா-131                              317


 

 ஐயுறுகின்றது. அவ்வையம் நீங்கச் சில சொற்களாவது பேசு. அமிழ்தே!
 அணங்கே! நின்  வாய்ச்சொல் கேளாமல் என் உயிர் அழிந்து
 கொண்டிருக்கிறது]

     நீங்கற்கு அருமை நின்று நினைந்து இரங்கல்:

    "பொய்உடையார்க்கு அரன்போல் அகலும் அகன்றால்புணரின
     மெய்உடை யார்க்குஅவன் அம்பலம் போல மிகநணுகும்
     மைஉடைவாள்கண் மணிஉடைப்பூண்முலைவாள் நுதல்வான்
     பைஉடை வாள்அர வத்துஅல் குல்காக்கும் பைம்புனமே".

                                                திருக்கோவை 48

 எனவரும்.                                                   131

     [வாள்கண், பூண்முலை, வாள்நுதல், அரவுஅல்குல் இவற்றை உடைய
 தலைவி காக்கும்  தினைப்புனம், யான் அவளை அகன்றால்
 பொய்உடையார்க்கு அரன் துன்பத்தைச் செய்துசேயன் ஆமாறுபோல மிக்க
 துயரத்தைச்செய்து எனக்குச் சேய்த்தாம்; இவளை அணைந்தால்
 மெய்யுடையார்க்கு அவன் அம்பலம் பேரின்பத்தைச் செய்து அணித்து
 ஆமாறுபோலப் பேருவகை செய்து எனக்கு மிகவும் அணித்தாம்]       131

 பாங்கற்கூட்டத்தின் வகை  

 504 சார்தல்1 கேட்டல்2 சாற்றல்3 எதிர்மறை4
     நேர்தல்5 கூடல்6 பாங்கில் கூட்டல்7 என்று
     ஆங்குஎழு வகைத்தே பாங்கற் கூட்டம்.

     இது நிறுத்தமுறையானே பாங்கற் கூட்டத்தின் வகை இத்துணைத்து
 என்கின்றது.

     இ-ள் சார்தல் முதலாகப் பாங்கில் கூட்டல் ஈறாக எழுவகைத்தாம்
 பாங்கற்கூட்டம் என்றவாறு.

 ஆங்கு அசை                                                132