1 தலைவன் பாங்கனைச் சார்தல்.
2 பாங்கன் தலைவனை வினாவுதல்.
3 தலைவன் தன்நிலையைக் கூறுதல்.
4 பாங்கன் தலைவன் கருத்தினை மறுத்தல்.
5 தலைவன் கருத்திற்குப் பாங்கன் உடன்படல்.
6 தலைவன் தலைவியைச் சேர்தல்.
7 தலைவியை ஆயத்திடைக் கூட்டல்.
பாங்கற் கூட்டம் நிகழின் இடந்தலைப்பாடு நிகழாது; இடந்தலைப்பாடு நிகழின் பாங்கற்கூட்டம் நிகழாது என்பது, இறையனார்களவியல் உரை, திருக்கோவையார் உரை, முத்துவீரிய உரை என்பனவற்றான் அறியப்படுகிறது. தாமே கூடும் இடந்தலைப்பாடும், பாங்கனால் கூடும் இடந்தலைப் பாடும் என்று இடந்தலைப்பாட்டினை இருவகையினது ஆக்குவர்நச்சினார்க்கினியர்.பாங்கற்கூட்டமாவது பாங்கனைக் கூடும் கூட்டம் என்று பொருள்கொள்வர் அவர்.
இடந்தலைப்பாடு வேறு, பாங்கற் கூட்டம் வேறு என்பார் நம்பி அகப்பொருள் ஆசிரியரும், மாறன் அகப்பொருள் ஆசிரியரும் இவரும் ஆவர்.
"ஆங்கனம் புணர்ந்த கிழவோன் தன்வயின்
பாங்க னோரில் குறிதலைப் பெய்தலும்
பாங்கிலன் தமியோள் இடந்தலைப் படலும்என்று
ஆங்கஅவ் விரண்டே தலைப்பெயல் மரபே".
|
|
|
|