அகத்திணையியல்-நூற்பா-132,133                           319


 

    "சார்தல் வினாதல் செப்பல் எதிர்மறை
     நேர்தல் கூடல் கூட்டல்என்று ஆங்குப்
     பார்புகழ் எழுவகை பாங்கற் கூட்டம்".               மா. அ. 28
                                                            132

பாங்கற்கூட்டத்தின் விரி

 505 தலைவன் பாங்கனைச் சார்தலும்1 பாங்கன்
     தலைவனை உற்றது வினாதலும்2 தலைவன்
     உற்றது உரைத்தலும்3 கற்றறி பாங்கன்
     கழறலும்4 கிழவோன் கழற்றுஎதிர் மறுத்தலும்5
     கிழவோற் பழித்தலும்6 கிழவோன் வேட்கை
     தாங்கற்கு அருமை சாற்றலும்7 பாங்கன்
     தன்மனத்து அழுங்கலும்8 தலைவனோடு அழுங்கலும்9
     எவ்விடத்து எவ்வியற்று என்றலும்10 அவன்அஃது
     இவ்விடத்து இவ்வியற்று என்றலும்11 பாங்கன்
     இறைவனைத் தேற்றலும்12 குறிவழிச் சேறலும்
     இறைவியைக் காண்டலும்14 இகழ்ந்ததற்கு இரங்கலும் 15
     தலைவனை வியத்தலும்16 தலைவியை வியத்தலும்17
     தலைவன் தனக்குத் தலைவிநிலை கூறலும்18
     தலைவன் சேறலும்19 தலைவியைக் காண்டலும்20
     கலவியின் மகிழ்தலும்21 புகழ்தலும்22 தலைவியைப்
     பாங்கியொடு வருகஎனப் பகர்தலும்23 பாங்கில்
     கூட்டலும்24 என்று ஈங்கு ஈட்டுநா லாறும்
     காட்டிய பாங்கற் கூட்டத்து விரியே.

     இது பாங்கற்கூட்டத்து விரி இத்துணைப் பகுதித்து என்கின்றது.

     இ-ள் தலைவன் பாங்கனைச் சார்தல் முதலாகப் பாங்கில் கூட்டல்
 ஈறாக இவ்விடத்துத் தொகுத்த இருபத்து நான்கு கிளவியும் மேல் காட்டிய
 பாங்கற்கூட்டத்து விரி என்றவாறு.