அகத்திணையியல்-நூற்பா-133                              321


 

 17 பாங்கன் தலைவியின் வனப்பு முதலியன கண்டு வியத்தல்.

 18 தலைவி தனியே நிற்றலைத் தலைவனுக்குப் பாங்கன் கூறல்.

 19 தலைவன் தலைவி இருக்கும் இடத்தை அடைதல்.

 20 தலைவன் தலைவியைக் காணுதல்.

 21 தலைவியோடு தலைவன் அளவளாவுதல்.

 22 தலைவியைப் புனைந்து உரைத்தல்.

 23 இனிவருங்கால் உயிர்த்தோழியோடு வருமாறு தலைவியிடம்
    தலைவன் குறிப்பிடுதல்.

 24 பாங்கியர்கூட்டத்திற்குச் செல்லுமாறு தலைவன் தலைவியை
    விடுத்தல்.

ஒத்த நூற்பாக்கள்  

    "நினைதல் வினாதல் உற்றது உரைத்தல்
     கழறல் மறுத்தல் கவன்றுரைத் தல்லே
     வலிஅழிவு உரைத்தல் விதியொடு வெறுத்தல்
     நொந்து கூறல் நோதல் நீங்கி
     இயல்இடம் கேட்டல் இயல்இடம் கூறல்
     வற்புறுத் தல்குறி வழிச்சேறல் காண்டல்
     வியந்துரைத் தல்அம் மெல்லியல் தன்னைக்
     கண்டமை கூறல் கருத்துக்கு ஏற்பச்
     செவ்வி செப்பல் அவ்விடத்து ஏகல்
     ஈங்குஇவை நிற்க இடந்தலை தனக்கும்
     ஆங்குஅவள் மெலிதல் பொழில்கண்டு மகிழ்தல்
     நீங்கா மகிழ்வொடு நிலைகண்டு வியத்தல்
     தளர்வு அகன்று உரைத்தல் மொழிபெற வருந்தல்
     கண்புதை வருத்தம் காவல் நாண்விடல்
     நண்பொடு சென்று நன்மருங்கு அணைதல்
     இன்றியமை யாமை ஆயத்து உய்த்தல்


     41