"செம்மல் பாங்கனைச் சேர்தலும் பாங்கன்
செம்மலோடு உற்றது வினாதலும் செம்மல்
உற்றது உரைத்தலும் மற்றுஅவன் கழறலும்
உரவோன் கழற்றுஎதிர் மறுத்தலும் உரவோற்
பழித்தலும் வேட்கை கழித்தற்கு அருமை
சாற்றலும் தன்மனத்து அழுங்கலும் தலைவனோடு
ஏற்றற்கு அழுங்கலும் ஏகுஅவண் என்றலும்
எவ்விடத்து எவ்வியற்று என்றலும் இறைவன்
அவ்விடத்து அவ்வியற்று என்றலும் பாங்கன்
இறைவனைத் தேற்றலும் குறிவழிச் சேறலும்
இறைவியைக் காண்டலும் இறைவியை எளிதின்
காட்டிய கடவுளைக் கண்ணுற்று இறைஞ்சலும்
வாள்தடங் கண்ணியை மதித்துஅவன் வியத்தலும்
இகழ்ந்ததற்கு இரங்கலும் இறைமகன் தனையே
புகழ்ந்துஅவன் வியத்தலும் புரவலன் தன்னொடு
நவ்வியங் கண்ணி நன்னிலை உரைத்தலும்
செவ்வி செப்பலும் செம்மல்அங்கு ஏகலும்
இணர்மலர்க் குழலியை இறைவன் காண்டலும்
புணர்தலும் புகழ்தலும் பூங்கொடி தன்னைப்
பாங்கியொடு வருகஎனப் பகர்ந்த பின்னர்
ஆயத்து உய்த்தலொடு அம்மூ வொன்பதும்
ஏய பாங்கன் கூட்டத்து விரியே". மா. அ. 29]