அகத்திணையியல்-நூற்பா-133                              323


 

     தலைவன் பாங்கனைச் சார்தல்:

    "பூங்கனை ஆர்புனல் தென்புலி யூர்புரிந்து அம்பலத்துள்
     ஆங்குஎனை ஆண்டுகொண்டு ஆடும்பிரான் அடித்தாமரைக்கே
     பாங்கனை யான்அன்ன பண்பனைக் கண்டுஇப் பரிசுஉரைத்தால்
     ஈங்குஎனை யார்தடுப் பார்மடப் பாவையை எய்துதற்கே."

திருக்கோவை 19

 எனவும்,

     [புலியூரை விரும்பி அம்பலத்துள் என்னை ஆண்டுகொண்டு ஆடும்
 சிவபெருமானுடைய திருவடிக்கண் ஈடுபாடு உடையவனும், என்னை ஒத்த
 பண்பினனும் ஆகிய பாங்கனைக் கண்டு, நிகழ்ந்ததை உரைத்துவிட்டால்,
 பின் தலைவியை எய்தற்கண் தடை ஏதும் நிகழாது.]

     பாங்கன் தலைவனை உற்றது வினாதல்:

    "சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்தும்என் சிந்தையுள்ளும்
     உறைவான் உயர்மதில் கூடலின் ஆய்ந்தஒண் தீந்தமிழின்
     துறைவாய் நுழைந்தனை யோஅன்றி ஏழிசைச் சூழல்புக்கோ
     இறைவா தடவரைத் தோட்குஎன் கொலாம்புகுந்து எய்தியதே".

திருக்கோவை 20

 எனவும்,

     [இறைவா! சிற்றம்பலமாகிய தூய இடத்தும் என் சிந்தையாகிய தாழ்ந்த
 இடத்தும் ஒருசேரதங்கியிருக்கும் சிவபெருமான் மதுரையில் ஆய்ந்த தமிழின்
 துறைக்கண் நுழைந்தாயா? இசைச்சூழலில் ஈடுபட்டாயா? நின் தோள்கள்
 வாடிய காரணம் என்ன?]

     தலைவன் உற்றது உரைத்தல்:

    "கோம்பிக்கு ஒதுங்கிமேயாமஞ்ஞை குஞ்சரம்கோள் இழைக்கும்
     பாம்பைப் பிடித்துப் படம்கிழித் தாங்குஅப் பணைமுலைக்கே
     தேம்பல் துடியிடை மான்மட நோக்கிதில் லைச்சிவன்தாள்
     ஆம்பொன் தடமலர் சூடும்என் ஆற்றல் அகற்றியதே".

திருக்கோவை 21

 எனவும்,