324                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     [கோம்பிக்குப் பயந்து இரை உண்ணாத மயில், யானையையும் கொல்லும்
 ஆற்றல் உடையபாம்பைப் பிடித்து அதன் படத்தைக் கிழித்தாற் போல,
  முலைப்பாரம் தாங்காது நையும் இடையை உடைய தலைவி சிவபெருமான்
 திருவடித் தாமரைகளையே சூடும் என் ஆற்றலைப்போக்கிவிட்டாள்.]

     கற்றறி பாங்கன் கழறல்:

    "உளமாம் வகைநம்மை உய்யவந்து ஆண்டுசென்று உம்பர்உய்யக
     களமாம் விடம்அமிழ்து ஆக்கிய தில்லைத்தொல் லோன்கமிலை
     வளமாம் பொதும்பரின் வஞ்சித்து நின்றுஓர்வஞ் சிம்மருங்குல்
     இளமான் விழித்ததுஎன் றோஇன்றுஎம் அண்ணல் இரங்கியதே".

திருக்கோவை 22

 எனவும்,

     [நம்மை ஆட்கொண்டு தேவர் உய்யவிடம் உண்ட சிவபெருமானுடைய
 கயிலை மலைச்சோலையில் வஞ்சிக்கொடி போன்ற இடையைஉடைய
 இளைய மான் விழித்ததுகண்டோ அண்ணலாகிய நீ மனம் தளர்ந்து
 இருக்கின்றாய்?]

     கிழவோன் கழற்றுஎதிர் மறுத்தல்:

    "சேணில்பொலிசெம் பொன்மாளிகைத் தில்லைச்சிற்றம்பலத்து
     மாணிக்கக் கூத்தன் வடவான் கயிலை மயிலைமன்னும்
     பூணின்பொலி கொங்கை ஆவியைஓவியப்பொற் கொழுந்தைக்
     காணின் கழறலை கண்டிலை மென்தோள் கரும்பினையே".

திருக்கோவை 23

 எனவும்,

     [செம்பொன் மாளிகைத் தில்லையிலுள்ள கூத்தப்பிரானின் கயிலை
 மலையில் தங்கியிருந்த என் உயிர் போன்ற ஓவியக் கொழுந்தை நீ
 கண்டிருந்தால் இப்படி என் கருத்தை மறுத்துப்பேசத் துணியாய்,
 காணாததனால் அன்றோ இவ்வாறு பேசுகிறாய்?]