அகத்திணையியல்-நூற்பா-133                              325


 

     கிழவோற் பழித்தல்:

 "இளங்கொம்பு ஒருதனி நின்றுஇருஞ் சாரலின் என்னைஇங்ஙன்
  உளங்கொண்டு உறுதுயர் செய்ததுஎன்றாய்விண் ஒளிரும மின்போல்
  விளங்கும் கதிர்வடி வேல்அண் ணலேதென்றல் மீதுஅசையத்
  துளங்கும் சிறுகொடிக் கோமத வேழம் துவக்குஉண்டதே."

அம்பி. 49

 எனவும்,

     [அண்ணலே! "மலைப்பகுதியில் இளங்கொம்பு ஒன்று என் உள்ளத்தைக்
 கைப்பற்றி மிக்கதுயரைத் தருகின்றது" என்று நீ கூறுவது, தென்றலுக்கு
 அசையும் சிறுகொடி மதயானையைககட்டும் ஆற்றலைப் பெற்றது போன்ற
 செய்தியாகும்.]

     கிழவோன் வேட்கை தாங்கற்கு அருமை சாற்றல்:

    "தலைப்படு சால்பினுக் கும்தள ரேன்சித்தம் பித்தன்என்று
     மலைத்துஅறி வார்இல்லை யாரையும் தேற்றுவன் எத்துணையும்
     கலைச்சிறு திங்கள் மிலைந்தசிற் றம்பல வன்கயிலை
     மலைச்சிறு மான்விழி யால்அழி வுற்று மயங்கினனே".

திருக்கோவை 25

 எனவும்,

     [இதற்கு முன் தலைமையான அமைதி தளராது இருந்தேன். நான் மனம்
 மயங்கினவன் என்று ஒருவரும் என்னைக் கூறியவர் இலர். பிறர் கொண்ட
 கலக்கங்களையும் யான் தெளிவித்துள்ளேன். ஆனால் இன்று
 சிற்றம்பலவனுடைய கயிலை மலைக்கண் கண்டதலைவியின மான்விழியால்
 மனம் அழிந்து மயங்கிவிட்டேன்.]

     பாங்கன் தன்மனத்து அழுங்கல்:

    "யானாம் அறிவு கொளுத்துகிற் பேன்இங்ஙன் ஏறுஅனையான்
     தானாம் அறிவும் தளர்ந்துநிற் பான்செந் தளவுஅரும்பும்