326                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 தேனாம் இனிய குதலைச்செவ் வாய்இளஞ் செவ்விநவ்வி
 மானாம் இவனை மயங்கஇவ் வாறு வருத்துவதே".

அம்பி. 51

 எனவும்,

     [முத்துப் போன்ற பற்கள், மழலை பேசும் செவ்வாய், மான்விழி
 இவற்றை உடையாள் தன்னை மயக்க, இவன் வருந்துகின்றானே! இவனுக்கு
 யானோ அறிவுரை கூற வல்லேன்? இவனா இப்படி அறிவு தளரக்கூடியவன்
 யாவும் வியப்பாய் உள்ளன.]

     தலைவனோடு அழுங்கல்:

 "ஆலத்தி னால்அமிர்து ஆக்கிய கோன்தில்லை அம்பலம்போல்
  கோலத்தி னாள்பொருட் டாக அமிர்தம் குணம்கெடினும்
  காலத்தி னால்மழை மாறினும் மாறாகக் கவிகைநின்பொன்
  சீலத்தை நீயும் நினையாது ஒழிவதுஎன் தீவினையே".

திருக்கோவை 27

     [அமிர்தம் குணம் மாறினும் பருவமழை பொய்ப்பினும் தவறாத
 கொடைத் தன்மையைஉடைய நீ, விடமுண்ட சிவபெருமான்
 அம்பலம்போன்ற வனப்பினாள் காரணமாக நின் பொன்போன்ற அரிய
 ஒழுக்கத்தை அறியாது மயங்குவது என் தீவினைப்பயனேயாம்.]

     எவ்விடத்து எவ்வியற்று என்றல்:

 "நின்னுடை நீர்மையும் நீயும்இவ்வாறு நினைத்தெருட்டும்
  என்னுடை நீர்மைஇதுஎன் என்பதேதில்லை ஏர்கொள்முக்கண்
  மன்னுடை மால்வரை யோமல ரோவிசும் போசிலம்பா
  என்இடம்யாது இயல் நின்னைஇன்னே செய்தஈர்ங்கொடிக்கே".

திருக்கோவை 28

 எனவும்,