[சிலம்பா! உன் பண்பும் இவ்வாறாயிற்று. கலங்காத நீயும் கலங்கி நிற்கின்றாய். உன்னைத் தெளியவைக்க முயலும் என் தன்மையை என் என்று சொல்லுவது? உன்னை இவ்வாறு கலக்கிய கொடிபோல்வாளின் இருப்பிடம் கயிலையா, தாமரையா, வான்உலகா? கூறு. அவள் இயல்பையும் விளங்கக்கூறு.]
அவன் அஃது இவ்விடத்து இவ்வியற்று என்றல்:
"விழியால் பிணையாம் விளங்குஇய லால்ம யிலாம்மிழற்றும்
மொழியால் கிளியாம் முதுவா னவர்தம் முடித்தொகைகள்
கழியாக் கழல்தில்லைக் கூத்தன் கயிலைமுத் தம்மலைத்தேன்
கொழியாத் திகழும் பொழிற்குஎழி லாம்எம் குலதெய்வமே".
[வானவர் வணங்கும் தில்லையான் கயிலைப் பொழிற்கண் உள்ள தலைவி, மான்விழியும் மயில் இயலும் கிளிமொழியும் உடையாள்.]
பாங்கன் இறைவனைத் தேற்றல்:
"குயிலைச் சிலம்புஅடிக் கொம்பினைத் தில்லைஎம் கூத்தப்பிரான்
கயிலைச் சிலம்பில்பைம் பூம்புனம் காக்கும் கருங்கண்செவ்வாய்
மயிலைச் சிலம்பகண்டு யான்போய் வருவன்வண் பூங்கொடிகள்
பயிலச் சிலம்புஎதிர் கூய்ப்பண்ணை நண்ணும் பளிக்கறையே"
[சிலம்ப! தில்லையான் கயிலைச்சிலம்பில் புனங்காக்கும்-மயிலையும் குயிலையும் பூங்கொம்பையும் போல் வாளைப்-பளிக்கறையை அடுத்துச் சென்று கண்டு வருவன்.]
"கொடுங்கால்குலவரை ஏழ்ஏழ்பொழில்எழில் குன்றும் அன்றும்
நடுங்கா தவனை நடுங்க நுடங்கும் நடுஉடைய
|
|
|
|