328                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 விடம்கால் அயில்கண்ணிமேவும்கொலாம்தில்லைஈசன் வெற்பில்
 தடங்கார் தருபெரு வான்பொழில் நீழல்அம் தண்புனத்தே".

திருக்கோவை 31

 எனவும்,

     [தில்லையான் மலையில் பொழில் நீழலில் தண்புனத்தே, மலைகளும்
 உலகுகளும் அழகு குன்றும் அன்றும் நடுங்காதவனை நடுங்கச்செய்த
 வேற்கண்ணி பொருந்தி இருப்பாளோ?]

     இறைவியைக் காண்டல்:

 "வடிக்கண் இவைவஞ்சி அஞ்சும் இடைஇது வாய்பவளம்
  துடிக்கின்றவாவெற்பன்சொல்பரிசேயான் தொடர்ந்துவிடா
  அடிச்சந்த மாமலர் அண்ணல்விண் ணோர்வணங்கு அம்பலம்போல்
  படிச்சந்த மும்இது வேஇவ ளேஅப் பணிமொழியே".

திருக்கோவை 32

 எனவும்,


 சிவபெருமானுடைய அம்பலம் போன்ற ஒப்பும் இதுவே. இவளே தலைவன்
 குறிப்பிட்ட தலைவி ஆவாள்.]

     பாங்கன் இகழ்ந்ததற்கு இரங்கல்:

 "பண் ஆர்பணிமொழிவண்ணமும்தண்ணறும்பைங்குவளைத்
  கண்ணால் உரைசெய்த காதலும் காமக் கனல்கொளுத்திப்
  புண்ணான நெஞ்சமும் தஞ்சம்இல் லாதவன் வன்பொறையும்
  எண்ணாது அருவினை யேன்இகழ்ந் தேன்எம் இறைவனையே".

அம்பி. 62

 எனவும்,

     [இத்தலைவியின் வனப்பினையும், அவள் கண்ணால் உரைத்த
 காதலையும், காமக்கனலால் புண்ணான தலைவன் நெஞ்சத்தினையும், அவன்
 பொறுமையையும் எண்ணாது, யான்தலைவனை இகழ்ந்தேனே.]