அகத்திணையியல்-நூற்பா-133                              329


 

     தலைவனை வியத்தல்:

 "குவளைக் களத்துஅம் பலவன் குரைகழல் போல்கமலத்
  தவளைப் பயங்கர மாகநின்று ஆண்ட அவயவத்தின்
  இவளைக் கண்டு இங்குநின்று அங்குவந்து அத்துணை யும்பகர்ந்த
  கவளக்களிற்று அண்ணலே திண்ணியான் இக்கடலிடத்தே".

திருக்கோவை 33

 எனவும்,

     [நீலகண்டனான சிவபெருமானின் திருவடிபோன்ற தாமரையில் வாழும்
 திருமகளை வென்ற உறுப்பு அழகினை உடைய இவளைக்கண்டு
 இவ்விடத்தைவிட்டு என்பால் வந்து இவ்வளவும் உரையாடிய நம் தலைவனே
 இவ்வுலகில் மன உறுதி உடையவன் ஆவான்.]

     தலைவியை வியத்தல்:

 "துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல்உழுத தோற்றம் மாய்வான்
  பொறைமலி பூம்புன்னைப் பூஉதிர் நுண்தாது போர்க்கும் கானல்
  நிறைமதி வாள்முகத்து நேர்கயல்கண் செய்த
  உறைமலிஉய்யாநோய்ஊர்சுணங்கின்மென்முலையேதீர்க்கும் போலும்"

சிலப். கானல். 8

 எனவும்,

     [வலம்புரி மணலை உழுத சுவடு மாறும்படிப் புன்னைப்பூ உதிர்ந்து
 நுண்ணிய மகரந்தம் மூடும் கடற்கரைச் சோலையில், தலைவியின்
 மதிமுகத்துக் கயற்கண்கள் தலைவனுக்குசசெய்துள்ள நோயை, அவள்
 மென்முலையே தீர்க்கும் போலும்.]

     தலைவன் தனக்குத் தலைவி நிலைகூறல்:

 "பணம்தாழ் அரவுஅரைச் சிற்றம்பலவர்பைம் பொன்கயிலைப்
  புணர்ந்து ஆங்கு அகன்ற பொருகரி உன்னிப் புனத்துஅயலே

       42