330                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 மணம்தாழ் பொழிற்கண் வடிக்கண் பரப்பி மடப்பிடிவாய்
 நிணம்தாழ் சுடர்இலை வேலகண் டேன்ஒன்று நின்றதுவே."

திருக்கோவை 34

 எனவும்,

     [வேல! சிற்றம்பலவன் கயிலையிலே புணர்ந்து அகன்ற களிற்றை
 உன்னிப் புனத்து அயலே பொழிற்கண் கண்பரப்பிப் பிடி ஒன்று
 நின்றதனைக் கண்டேன்.]

     தலைவன் சேறல்:

 "எயில்குலம் மூன்றுஇருந் தீஎய்த எய்தவன் தில்லைஒத்துக்
  குயில்குலம் கொண்டுதொண் டைக்கனி வாய்க்குளிர்முத் தம்நிரைத்து
  அயில்குல வேல்கம லத்தில் கிடத்தி அனம்நடக்கும்
  மயில்குலம் கண்டது உண்டேல்அது என்னுடைமன் உயிரே".

திருக்கோவை 36

 எனவும்,

     [திரிபுரம் எரித்த சிவபெருமான் தில்லையை ஒத்து, குயில் ஒலிகொண்டு,
 தொண்டைக்கனி போன்ற வாயில் முத்துப்போன்ற பற்கள் பொருந்த, வேல்
 கமலத்தில் கிடப்ப, அன்னம்போல நடக்கும் குலமயில் உண்டாயின் அதுவே
 என் உயிராம்.]

     தலைவியைக் காண்டல்:

 "மறக்கும் பரிசுஅறி யாவண்டல் ஆயம் மறந்துவந்து
  சிறக்கும் கமலத் திருநின்ற வாசெங்கண் முத்துஅரும்ப
  நிறக்கும்பசலையும்மேனியுமாய்நெஞ்சில்நீடுஉயிர்ப்பும்
  பிறக்கும் பெருநல னும்மடம் நாணும் பிணங்கவிட்டே".

அம்பி 66

 எனவும்,

     [மறத்தல் அறியாத தோழியர்கூட்டத்தை மறந்துவந்து கண்களில் முத்து
 அரும்ப, மேனியில் பசலை பாய, பெருமூச்சு விட்டு, நலனும் நாணும் மடனும்
 பிணங்கவிட்டுத் திருமகள் போன்ற தலைவி நிற்கின்றவாறு என்னே!]