தலைவியைப் பாங்கியொடு வருக எனப் பகர்தல்:
"முன்ஆவி வந்த முருகன்வை வேல்கண் முனைகவர்ந்த
என்ஆவி நல்கும் இதுநினை வேல்இன்று போய்இனிய
நல்நாவி வாச நறுங்குழ லாய்வரின் நாளைஇங்ஙன்
நின்ஆவி அன்னவர் முன்னாக அன்றி நினையலையே".
[நறுங்குழலாய்! சரவணப்பொய்கையில் தோன்றிய முருகனுடைய வேல்போன்ற நின் கூரிய கண்கள் கவர்ந்த என் உயிரைக் காப்பது நின் விருப்பாயின்,நாளை நின் உயிர் போன்ற தோழியோடு வருதலை நினைப்பாயாக.]
"முற்றும் பழுதுஅற மொய்ம்முலை ஆகம்முயங்கும் இன்பம்
பெற்றும் பெறாத பெருநலம் தந்தனிர் பேர்அளிகள்
சுற்றும் பரிமளச் சோலையில் ஆயம் தொழஅருவி
எற்றும் பனிவரைச் சீறூர் நலம்பெற எய்துகவே".
[பழுதற்ற மார்பினை முயங்கும் பெருநலம் தந்த நீ, சோலையில் ஆயம்தொழ, அருவி மோதும் பனிவரைச் சீறூரில் நலம்பெற எய்துவாயாக.]
இவற்றுள், முன்னையமூன்றும் சார்தல் கேட்டல் சாற்றல் என்னும் மூன்றற்கும், பாங்கன் கழறல் முதலாகக் கிழவோன் வேட்கை தாங்கற்கு அருமை சாற்றல் ஈறாகச் சொல்லப்பட்ட நான்கும் எதிர்மறைக்கும், தன்மனத்து அழுங்கல் முதலாகத் தலைவன் தனக்குத் தலைவிநிலை கூறல் ஈறாகச் சொல்லப்பட்ட பதினொன்றும் நேர்தற்கும், தலைவன் சேறல் முதலாகத்தலைவியைப் புகழ்தல் ஈறாகச் சொல்லப்பட்ட நான்கும் கூடற்கும்,
|
|
|
|