பாங்கனை ஆண்டுச் செலல் வேண்டும் என்றல்:
"காயா ஈன்ற கணவீ நாற்றம்
மாயா முன்றில் வருவளி துரக்கும்
ஆகோள் வாழ்நர் சிறுகுடி யாட்டி
வேய்ஏர் மென்தோள் விலக்குநர்
யாரோ வாழிநீ அவ்வயின் செலினே".
[காயாமலர் மணம், வீட்டின் முன்னிடத்தில் நீங்காதவாறு, காற்று வீசும், பசுக்களைக் கவர்ந்து வாழும் மக்கள் சார்ந்த சிறுகுடிக்கண் நீ செல்லின், தலைவியின் மென்தோள்களை நீ காண்டலை விலக்குவோர் ஒருவரும் இரார்.]
தலைவி உருவு வெளிப்பட்டமை கண்டு தலைவன் கூறுதல்:
"விம்முறு துயரமொடு வெந்நோய் ஆகிய
எம்முறு துயரம் தீரிய சென்ற
நான்மறை நவிற்றிய நூல்நெறி மார்பன்
கண்டனன் கொல்லோ தானே தண்டாது
புருவக் கொடுவில் கோலிப் பூங்கண்
செருவப் பகழியில் சேர்த்துஅழிவு உறீஇ
ஏத்தொழில் தொடங்கி ஏமுறுத்து அகன்ற
மடமான் நோக்கின் தடமென் தோளியைத்
தண்தழை ததும்பிய இன்னிழல் ஒருசிறை
உடன் ஆடு ஆயத்து நீங்கி
இடனா நின்ற ஏமுறு நிலையே."
[துயரம் மிக்குக் காமநோய் வருத்தும் என் பெருந்துயரைத் தீர்க்கச்சென்ற பூணூல் அணிந்த அந்தணப் பாங்கன், புருவவில் கோலிக் கண்களாகிய அம்பினைத் தொடுத்து அழித்தலைக்கருதி விடுத்து என்னை மயக்கம் உறுத்திச் சென்ற மான்போன்ற நோக்கினை உடைய மென்தோளியை,
|
|
|
|