[என் மிக்கநோயைத் தீர்த்தற்கு என் பார்ப்பனப்பாங்கன் தன் நோய் போலக் கருதித் தளர்கின்றான். ஆயவெள்ளம் நீங்கித் தனித்து நிற்கும் தலைவியை அவன் தெளிவாகக் கண்டு வருவான்கொல்.]
இறைவியை எளிதில் காட்டிய தெய்வத்தை வணங்குதல்:
"அளிதோ தானே அருள்மிக உடைத்தே களிதாம் வண்டினம் கலந்துஉண்டு ஆடும் ஒலிதார் மார்பின் ஓங்குஎழில் குரிசிலைப் பிரியாத் துயரமொடு பேதுறுத்து அகன்ற கிளிஏர் மழலை கேழ்கிளர் தாமரை ஆர்ந்த சுற்றமொடு தமரின் நீங்கித் தானே தமியள் காட்டிய வானோர் தெய்வம் வணங்குவல் யானே."
தொல். பொ. மே.
எனவரும்.
[வண்டினம் கலந்துஉண்டு ஆடும் மாலையை அணிந்த மார்பினன் ஆகிய குரிசிலைத் துயரத்தோடு மயக்கமுறுத்தி நீங்கிய கிளிபோன்ற மழலையளாய், தாமரைஇதழ் போலத் தன்னைச்சூழ்ந்த ஆயத்தாரை நீங்கித் தானே தனித்து நிற்குமாறு