336 இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்
தலைவியைக் காட்டிய தெய்வம் என்மாட்டு இரக்கம் உடையது. அருள்மிக உடையது.அதனை யான் வணங்குவல்.]
தலைவி தலைவன் வருங்கொல் என நினைத்தல்:
"புறவுஆர் நறுமுல்லை போல்நகை யார்பொய்தல் ஆடுசிற்றில் நறவுஆடு சந்தனம் நாறுதண் சாரல் நயந்தஇன்பம் மறவாத நெஞ்சம் வனமுலை தோய மணிப்புயமும் உறவாட நிற்பர்கொல் லோஎன்னை ஆளும் ஒருவர்வந்தே".
அம்பி. 25
எனவரும்.
[முல்லைநகையார் ஆகிய தோழியர் சிற்றில் இழைத்து விளையாடும் சந்தனச்சாரலில், முன்புபெற்ற இன்பத்தை மறவாது, முலை தோய மணிப்புயம் தழுவுவதற்கு என்னையாளும் தலைவர் வந்து நிற்பார்கொல்?]
பாங்கனை உள்மகிழ்ந்து உரைத்தல்:
"நெய்வளர் ஐம்பால் நேரிழை மாதரை மெய்ந்நிலை திரியா மேதகு சுற்றமொடு எய்துதல் அரிதுஎன இன்னணம் இரங்கிக் கையறு நெஞ்சமொடு கவன்றுநனி பெயர்ந்தஎன் பைதல் நெஞ்சம் பரிவு நீங்கித் தெய்வத் தன்ன தெரிஇழை மென்தோள் எய்தத் தந்த ஏந்தலோடு எம்மிடை நற்பால் கேண்மை நாள்தொறும் எய்த அப்பால் பிறப்பினும் பெறுகமற்று எமக்கே."
தொல். பொ. மே.
எனவரும். 133
["ஐம்பாலை உடைய தலைவியைத் தோழியர் இடைச்சென்று அடைதல் அரிது" என்று இவ்வாறு இரங்கிச் செயலற்ற மனத்தோடு கவலையுற்றுப் போகிய என் வருந்தும்