507 நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும்
செய்வினை மறைப்பும் செலவும் பயில்வும்என்று
இவ்வகை ஏழினும் ஐயம்உற்று ஓர்தலும்1
அவ்வகை தன்னால் ஐயம் தீர்தலும்2
மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது
பல்வேறு கவர்பொருள் சொல்லின் ஆடலும்3
பெட்டவாயில்பெற்று இரவுவலி யுறுத்தோன்
கண்ணியும் தழையும் ஏந்தி நண்ணி