"ஆங்குஉணர்ந்து அல்லது கிழவோள் தேஎத்துத்
தான்குறை உறுதல் தோழிக்கு இல்லை".
"இவ்வகை ஏழினும் ஐயம்உற்று ஓர்தலும்
அவ்வகை தன்னால் ஐயம் தீர்தலும்
மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது
பல்வேறு கவர்பொருள் சொல்லின் ஆடலும்."
பெருநாணும் பேரச்சமும் உடையாள் தலைவி ஆதலின், இறந்துபாடு பயப்பன கூறி நாடாமைக்கு அன்றே,
"நாணவும் நடுங்கவும் நாடாள் தோழி
காணுங் காலைத் தலைமகள் தேஎத்து".
இறை. அக. உரை 7 மேற்
எனச் சூத்திரம் பிறந்தது ஆதலின், இங்ஙனம் கூறி நாடாமைக்கு
"மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது
பல்வேறு கவர்பொருட் சொல்லின் ஆடல்".
இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த பின்னைத் தன்னை அவள் காணாமைத் தான் அவளைக் காணுவதோர் அணுமைக்கண் நின்றானாக, மற்றையார் எல்லாம் தலைமகட்குச் செய்யும் வழிபாடும் தோழி விசேடத்தால் செய்யும் வழிபாடும், எல்லார்க்கும் தலைமகள் செய்யும் அருளிச் செய்கையும் தோழிக்கு விசேடத்தால் செய்யும் அருளிச்செய்கையும் கண்டு, "இவளே போலும் இவட்குச் சிறந்தாள்; இதுவும் எனக்கு ஒரு சார்பாம்" என உணர்ந்து தலைவன் முன் பேணினமையால், "பெட்டவாயில்" என்றார்.
|
|
|
|