அகத்திணையியல்-நூற்பா-135                             345


 

ஒத்த நூற்பாக்கள்  

    "நாற்றமும் .... .... .... உணர்ந்த பின்றை
     மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது
     பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும்".

தொல். பொ. 114

    "புணர்ந்த .... .... .... மேற்றே".                     இறை. அக. 5

    "பெட்ட வாயில் .... .... .... பகுதியும்".

தொல். பொ. 112

    "இரந்து குறை .... ..... ..... .....என்ப".                இறை. அக. 6

     முழுதும். -                                 ந. அ. 139, 140, 141

 அவற்றுள்,

     நாற்றம் முதலாப் பயில்வுஈ றாம்என
     ஆற்றல் ஏழினும் ஐயம்உற்று ஓர்தலும்
     சாற்றிய ஏழினும் ஐயம் தீர்தலும்
     மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது
     பல்வேறு கவர்பொருள் பகர்ந்துநா டலும்என
     மூன்று கூற்றன முன்னுற வுணர்தல்".

மா. அ. 31

    "பெட்ட வாயில்பெற்று இரவுவலி யுறுத்தோன்
     கண்ணியும் தழையும் கையுறை ஏந்தி
     ஊர்பெயர் கெடுதி உடன்பிற வினாதலும்
     யார்இவர் இவர்மனத்து எண்ணம் யாதுஎனத்
     தேர்தலும் தெளிதலும் எனத்தெளி வுடையோர்
     ஓர்இரண்டு என்ப குறைஉற உணர்தல்".

மா. அ. 32

    "ஆய்ந்தவன் கையுறை ஏந்திவந்து அவ்வகை
     வினாவுழி எதிர்மொழி விளம்பலும் இறைவனை
     நகுதலும் இருவர்உட் கோள்நா டலும்என

       44