346                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     உவகையுற்று அவர்தாம் இருவரும் உள்வழி
     அவன்வரவு உணர்தலும் மூன்றுஎன் றனரே".

மா. அ. 33

    "விதிஇரு நான்கிவை மேதகு பாங்கி
     மதிஉடன் பாட்டிற்கு வாய்ந்த விரியே".

மா. அ. 34

    "சேறல் துணிதல் வேழம் வினாதல்
     கலைமான் வழிபதி பெயர்வினா தல்லே
     மொழிபெறாது உரைத்தல் கருத்துஅறி வித்தல்
     இடைவி னாதலோடு இவைஈ ரைந்தும்
     மடவரல் தோழிக்கு மதிஉடன் படுத்தல்.

திருக்கோவை. மு. வீ. கள. 10

    "ஐயம் அழிதலும் அறிவு நாடலும்
     மையறு தோழி அவன்வர உணர்தல்

திருக்கோவை. மு. வீ. கள. 11

    "வாட்டம் வினாதல் முன்னுற உணர்தல்
     கூட்டி உரைக்கும் குறிப்புரை யாகும்".

திருக்கோவை. மு. வீ. கள. 12

    "குறையுற்று நிற்றல் அவன்குறிப்பு அறிதல்
     அவள்குறிப்பு அறிதலோடு அவர்நினைவு எண்ணல்
     கூறிய நான்கும் குறையுற உணர்வுஎனத்
     தேறிய பொருளில் தெளிந்திசி னோரே".

திருக்கோவை. மு. வீ. கள. 13

     நாற்றம் முதலிய ஏழானும் ஐயம்உற்று ஓர்தல்:

 "பூங்கேச மன்றல் புனையா எழில்வெண் புதுமதிகண்டு
  ஆங்கே இகழ்தல் அருகிய உண்டி அருஞ்செலவு
  தீங்கே கரத்தல் ஒருவயி னேஎன்றும் சென்றுநிற்றல்
  தாம்கே வலம்அல்ல வந்ததுஎன் னேஇந்தத் தையலுக்கே."

அம்பி. 74

 எனவரும்,