348                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     ஒழுக்கத்தான் ஐயம் உற்று ஓர்தல்:

 "கந்துஆ டியகளிற் றார்கடம் பாடவிக் காவின்மின்போல்
  வந்தாள் ஒழுக்கவழக்கு என்சொல்வேன் வண்டல் ஆடலும் பூஞ்
  சந்துஆடு சோலை மணிஊசல் ஆடலும் தண்தரளப்
  பந்துஆடலும்மறந் தாள்என்ன பாவம் பலித்ததுவே".

மதுரை. 97

 எனவும்,

     [சிவபெருமானின் கடம்பாடவிச் சோலையில் மின்போல் வந்த
 தலைவியின் ஒழுக்கம்பற்றி யாது சொல்லவல்லேன்? வண்டல் ஆடுதலும்,
 சோலையில் ஊசல் ஆடுதலும், பந்து ஆடுதலும்  மறந்துவிட்டாள். என்ன
 தீவினை ஏற்பட்டு விட்டதோ?]

     உண்டியான் ஐயம் உற்று ஓர்தல்:

 "பெருந்தா மரைப்பதம் போற்றிநிற் பார்பிற விப்பிணிக்கு
  மருந்தா கியபெரு மான்மது ரேசர் வரையில் இந்தக்
  கருந்தாரை வேல்கண்ணிக்கு என்னகண் மாயம் கலந்ததுஅண்டர்
  அருந்தா அமுதுஅருந் தப்புகுந் தாலும் அருந்திலளே".

மதுரை. 98

 எனவும்,

     [அடியார்க்குப் பிறவிப்பிணியைப் போக்கும் மதுரேசர் மலையில்
 இத்தலைவிக்கு என்னமாயம் ஏற்பட்டுவிட்டதோ? அறியேன்; தேவாமிருதம்
 போலும் சுவைஉடைய பொருள்களையும் உண்ண மறுக்கிறாள்.]

     செய்வினை மறைப்பான் ஐயம்உற்று ஓர்தல்:

 "யாமேயும் அன்றி இனஆய வெள்ளமும் இன்றிஇவர்
  தாமே புரியும் தவம்என்கொ லோதண் தரளம்அணி
  வாம்மே கலைப்பங்கர் வாழ்மது ராபுரி வைகைசுற்றும்
  பூமேவு சோலையும் செய்குன்று மாகப் புகுந்துநின்றே".

மதுரை. 99

 எனவும்,