[மலையனுடைய ஒள்ளிய வேல்போன்ற கண்ணைஉடைய தலைவி முலை பருப்பதன்முன்னும் பேரறிவு படைத்துவிட்டாள்.]
மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர்பொருள் சொல்லின் ஆடலுள், பிறைதொழுக என்றல்:
"மைவார் கருங்கண்ணி செங்கரம் கூப்பு மறந்தும்மற்றைப்
பொய்வா னவரில் புகாதுதன் பொன்அடிக் கேஅடியேன்
உய்வான் புகஒளிர் தில்லைநின் றோன்சடை மேலதுஒத்துச்
செவ்வான் அடைந்த பசுங்கதிர் வெள்ளைச் சிறுபிறைக்கே".
[மறந்தும் பிறதெய்வங்களை வழிபடாது தன் அடிகளையே வழிபடுமாறு என்னை அமைத்துத் தில்லையில் நிற்கும் பெருமானின் சடைமேல் இருக்கும் பிறையை ஒத்த இப்பிறைச்சந்திரனை, கருங்கண்ணியே! நீ வழிபடுவாயாக. கணவன் அமைந்தபின், அவன் வழிபடும் தெய்வத்தையன்றிப் பிறிது ஒன்றினை அவன் இசைவுபெறாது கற்புடைப் பெண் வழிபடாள் ஆதலின், தலைவி பிறையைத் தொழ மறுப்பாள் என்பது]
"கோடுஉயர் தண்பிறை தோய்குன்றம் ஈதுபைங் கொன்றைஎன்ன
நீடிய பூங்குழல் நேரிழை யாய்நென்னல் நின்னைஒழிந்து
ஆடிய பூஞ்சுனை வாய்அளி மூசி அளித்தவண்ணம்
வாடியது அன்றி வருந்திய காரணம் மற்றில்லையே".
|
|
|
|