[வான் அளாவிய இக்குன்றில், பூங்குழல் தோழியே! நேற்று நின்னை விடுத்து யான் குளித்த சுனையில் வண்டுகள் என்மேல் மொய்த்ததனால் உடல் வாடி விட்டது. யான் வருந்திய காரணம் அதுவே; பிறிதுஇல்லை,]
"நீலம் பவளம் படரப் பவள நிறம்தரளக்
கோலம் புனைய நுதல்குறு வேர்வுஎழக் கோமளமே
போலும் திருநிறம் பொன்நிற மாகப் புனைசுனைநீர்
ஏலம் தருகுழ லாய்கிடை யாதுகொல் எங்களுக்கே".
[ஏலம்கமழ் குழலீ! நின் கண்கள் சிவக்கவும், உதடுகள் வெளுக்கவும் நெற்றியில் வியர்வை துளிக்கவும், நின் நிறம் பொன் நிறமாகவும், நின்னைச் சுனைநீர் மாற்றிவிட்டது. இம்மாற்றத்தை எங்களுக்கு ஏற்படுத்தவில்லையே!]
"பருங்கண் கவர்கொலை வேழப் படையோன் படப்படர்தீத்
தரும்கண் ணுதல்தில்லை அம்பலத் தோன்தட மால்வரைவாய்க்
கருங்கண் சிவப்பக் கனிவாய் விளர்ப்பக்கண் ஆர்அளிபின்
வரும்கள்மா லைமலர் சூட்டவற்றோ மற்றுஅவ் வான்சுனையே".
[காமனை எரித்த தில்லையான் மலையில் நீ ஆடியசுனை நின் கருங்கண் சிவப்பச் செவ்வாய் விளர்ப்ப வண்டுமொய்க்கும் மாலையை நினக்குச் சூட்டும் ஆற்றல் உடையதோ?]
"செந்நிற மேனிவெண்ணீ றணிவோன் தில்லை அம்பலம்போல்
அந்நிற மேனிநின் கொங்கையில் அங்குஅழி குங்குமமும்
|
|
|
|