மைந்நிற வார்குழல் மாலையும் தாரும் வளாய்மதம்சேர்
இந்நிற மும்பெறின் யானும் குடைவன் இருஞ்சுனையே".
[சிவபெருமானுடைய அம்பலம் போன்ற உன் மேனியில் கொங்கையில் அழியும் குங்குமமும், குழற்குமாலையும், தாரும், இப் புதுநிறமும், அமைந்துள்ளமை போல, யானும் பெறும் வாய்ப்பு உண்டாயின், யானும் அச்சுனையில் குடைவேன்.]
"ஆஆ இருவர் அறியா அடிதில்லை அம்பலத்து
மூவா யிரவர் வணங்கநின் றோனைஉன் னாரின்முன்னித்
தீவாய் உழுவை கிழித்ததுஅந் தோசிறி தேபிழைப்பித்து
ஆஆ மணிவேல் பணிகொண்ட வாறுஇன்றுஓர் ஆண்தகையே".
[பிரமனும் மாலும் அறியாத அடிகளைத் தில்லைவாழ் அந்தணர் வணங்குமாறு நிற்கும் பெருமானை நினையாதவரைப் போலத் துன்பம் உறுமாறு, ஓர் ஆண்தகையைப் புலியொன்று கிழிக்க வரக் கணநேரத்தில் தன் வேலை அதன்மேல் பாய்ச்சி அவன் உயிர் பிழைத்தான்.]
"பண்டுஇப் புனத்துப் பகலிடத்து ஏனலுள்
கண்டுஇக் களிற்றை அறிவன்மன்-திண்டிக்
கதிரன் பழையனூர்க் கார்நீலக் கண்ணாய்
உதிரம் உடைத்து இதன் கோடு". சிற்றெட்டகம்.
இன்னோரன்ன காட்டின், இறந்துபாடு பயத்தலான் வழிநிலை பிழைத்தனவாம் ஆதலின், ஈண்டைக்கு ஏலாஎன மறுக்க.
|
|
|
|