அகத்திணையியல்-நூற்பா-135                             353


 

     [பண்டும் இத்தினைப்புனத்தில் இக்களிற்றைக் கண்டு அறிவேன்.
 தலைவியே! இன்று  அதன்கோடு உதிரம் தோய்ந்து காணப்பட்டது.

     நாணநாட்டம், நடுங்கநாட்டம் இவைபற்றித் திருக்கோவையார்
 உரையாசிரியரான  பேராசிரியர்,

    "பிறைதொழுக என்றல் பின்னும் அவளை
     உறவுஎன வேறு படுத்தி உரைத்தல்
     சுனையாடல் கூறல் தோற்றம் கண்டு
     புணர்ச்சி உரைத்தல் பொதுஎனக் கூறி
     மதியுடம் படுதல் வழிநாணல் நடுங்கல்
     புலிமிசை வைத்தல் புகலுங் காலே".

     என்று வரைந்த நூற்பாவும், அதற்கு அமைந்த இலக்கிய
 எடுத்துக்காட்டுக்களும், அந்நூற்பாவை ஒட்டிய முத்து வீரியக்
 களவொழுக்கவியல் 14-ஆம் நூற்பாவும் இவ்வாசிரியர்  கருத்துக்கு ஏற்பன
 அல்ல.]

     பெட்டவாயில் பெற்றுச் சேறல்:

    "எளிதுஅன்று இனிக்கனி வாய்வல்லி புல்லல் எழில்மதிக்கீற்று
     ஒளிசென்ற செஞ்சடைக் கூத்தப் பிரானைஉன் னாரின்என்கண்
     தெளிசென்ற வேல்கண் வருவித்த செல்லல்எல் லாம்தெளிவித்து
     அளிசென்ற பூங்குழல் தோழிக்கு வாழி அறிவிப்பனே".

திருக்கோவை. 50

 எனவும்,

     [இனி, தலைவியை யானே எதிர்ப்பட்டுப் புணர்தல் அவ்வளவு
 எளியதன்று. திரிபுரத்தை  அழித்த சிவபெருமானை நினையாதவர் போல,
 என்மனத்துத் தலைவியின் கண்கள் வருவித்த  துன்பங்களை எல்லாம்
 அவள் தோழிக்கு அறிவித்து அவள் வாயிலாகக் கூட்டத்தைத்
 தொடர்வேன்.]

       45