[கோதையரே! பிறை சூடிய நீலகண்டனான சிவபெருமானுடைய கயிலை மலையின் உம் ஊர்ப்பெயர் கேட்கவும் அதனைக் கூறுதல் பழி என்று விடுத்தீர் ஆயினும், உம் பெயர்களையாவது கூறுங்கள்.]
ஊரும் பிறவும் உடன்வினாதல்:
"அருவி ஆர்க்கும் பெருவரை நண்ணி
கன்றுகால் யாத்த மன்றப் பலவின்
வேர்க்கொண்டு தூங்கும் கொழுஞ்சுளைப் பெரும்பழம்
குழவிச் சேதா மாந்தி அயலது
வேய்பயில் இறும்பின்ஆம் ஊறல் பருகும்
பெருங்கல் வேலிச் சிறுகுடி யாதுஎனச்
சொல்லவும் சொல்லீர் ஆயின் கல்லெனக்
கருவி மாமழை வீழ்ந்தென எழுந்த
செங்கேழ் ஆடிய செழுங்குரல் சிறுதினைக்
கொய்புனம் காவலும் நுமதோ
கோடுஏந்து அல்குல் நீள்தோ ளீரே".
[நீள்தோளீரே! "அருவி ஒலிக்கும் மலையை அடைந்து, கன்றுகள் தம் அடிமரங்களில் கட்டப்பட்ட மன்றத்திலுள்ள பலாவின் வேரில் தொங்கும் பழத்தைப் பசுக்கன்று உண்டு மூங்கில் வளர்ந்த பக்கத்திலுள்ள குறுங்காட்டில் உள்ள நீரைப் பருகும் மலைசூழ்ந்த நும் சிறுகுடி யாது?" என்று வினவவும், விடையிறாது போயினீர். அது கிடக்க; மழையால் கருவுற்ற சிறுதினை விளையும் இத் தினைப்புனங் காவல் உமதோ? அதனையாவது கூறுமின்.]
கெடுதியுள் வேழம் வினாதல்:
"இரும்களி யாய்இன்று யான்இறு மாப்பஇன் பப்பணிவோர்
மருங்குஅளியாஅனல் ஆடவல்லோன் தில்லையான் மலைஈங்கு
|
|
|
|