ஒருங்குஅளி ஆர்ப்ப உமிழ்மும் மதத்துஇரு கோட்டுஒருநீள்
கருங்களி ஆர்மத யானைஉண் டோவரக் கண்டதுவே".
[யான் மகிழுமாறு தன்னைப் பணிபவருக்கு இன்பம் அளித்து அனலில் ஆடும் தில்லையான் மலையில், மதத்தில் வண்டுகள் அமர்ந்து ஒலிப்ப ஒரு மதயானை இப்பக்கம் வந்தததனைக் கண்டீரோ?]
"நறைபரந்த சாந்தம் அறஎறிந்து நாளால்
உறைஎதிர்ந்து வித்தியஊழ் ஏனல்-பிறைஎதிர்ந்த
தாமரைபோல் வாள்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ
ஏமரை போந்தன ஈண்டு".
[சந்தன மரங்களை வெட்டி நிலம் திருத்தி விதைத்த தினைப்புனத்தில், பிறையை மேலேகொண்ட தாமரைபோன்ற முகத்தை உடைய தாழ்குழலீர்! அம்பு தன்மேல் புதையுண்ட மான்கள் இப்பக்கம் வந்தனவற்றைக் காணவில்லையா?]
"கருங்கண் ணனைஅறி யாமைநின் றோன்தில்லைக் கார்ப்பொழில்வாய்
வரும்கள் நனையவண்டு ஆடும் வளர்இள வல்லிஅன்னீர்
இருங்கண் அனைய கணைபொரு புண்புணர் இப்புனத்தின்
மருங்கண் அனையதுஉண் டோவந்தது ஈங்குஒரு வான்கலையே."
[திருமால் அறியாதபடி நின்ற சிவபெருமானுடைய பொழிலிலே வண்டுகள் சூழும் கொடிபோல்வீர்! இங்கு இப்பக்கல் உம் கண்கள்போன்ற அம்புகள்பட்ட புண்ணோடு கலைமான் ஒன்று வந்தது உண்டோ?]
|
|
|
|