அகத்திணையியல்-நூற்பா-135                              357


 

     வன்றி வினாதல்:

  "தங்குறிப்பி னோரும் தலைச்சென்று கண்டக்கால்
   எங்குறிப்பின் நோம்என்று இகழ்ந்திரார்-நும்குறிப்பின்
   வென்றி படர்நெடுங்கண் வேய்த்தோளீர் கூறீரோ
   வன்றி படர்ந்த வழி"

தொ. பொ. மே

 எனவும் வரும். வன்றி - பன்றி.

     [தம் செயலில் ஈடுபட்டாரும், ஒருவர் தம்மைக் காண வருவாராயின்,
 தம் செயல் கெடுமே என்று வந்தவரை வினாவாது இகழ்ந்து" வாளா
 இருக்கமாட்டார்கள். அவ்வாறாக, நெடுங்கண் வேய்த்தோளீர்! பன்றிஒன்று
 இப்பக்கல் சென்ற வழியை நீர் கூறீரோ?]

     மானொடு மனம் வினாதல்:

  "கனம்வந்து இறைஞ்சும் கடம்பா டவியர் கருணைஎன்னத்
   தனம்வந்து அரும்பும் சுரிகுழ லீர்என் சரத்தொடுமான்
   இனம்வந்த தோவந்த மான்பிணை தேடிஇளைத்துமற்றுஎன்
   மனம்வந்த தோஉரை யீர்உங்கள் காவல் மலிபுனத்தே".

மதுரை 87

 எனவரும்,

     [மேகம் தாழும் கடம்பமரக் காட்டினை உடைய சிவ பெருமானுடைய
 அருள்போல, முலைமுகம் செய்துள்ள நங்கையரே! நீங்கள் காக்கும்
 இப்புனத்திற்கு என் அம்போடு மான் ஒன்று வந்ததோ? அம்மானைத் தேடி
 இளைத்து என் மனம் வந்ததோ? கூறுவீராக]

     வழி வினாதல்:

 "சிலம்புஅணி கொண்டசெஞ் சீறடி பங்கன்தன் சீர்அடியார்
  குலம்பணி கொள்ள எனைக்கொடுத்தோன்கொண்டு தான்அணியும்
  கலம்பணி கொண்டுஇடம் அம்பலம் கொண்டவன் கார்க்கயிலைச்
  சிலம்புஅணி கொண்டநும் சீறூர்க்கு உரைமின்கள் செல்நெறியே".

திருக்கோவை 54

 எனவும்,