358                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     [பார்வதிபங்கனாய்த் தன்அடியார்க்கு என்னை அடியவன் ஆக்கிப்
 பாம்பினை அணிகலனாக அணிந்து அம்பலத்தான் ஆகும் சிவபெருமானின்
 கயிலைச் சிலம்பில் உள்ள உம்சீறூருக்குச் செல்லும் வழியைக் கூறுங்கள்.]

     மொழியாமை வினாதல்:

 "இரதம் உடைய நடம்ஆட்டு உடையவர் எம்உடையவர்
  வரதம் உடைய அணிதில்லை அன்ன வரிப்புனத்தார்
  விரதம் உடையர் விருந்தொடுபேச்சின்மை மீட்டு அதுஅன்றேல்
  சரதம் உடையர் மணிவாய் திறக்கின் சலக்குஎன்பவே"

திருக்கோவை. 57

 எனவும்,

     [சுவையான நடனம் ஆடும் சிவபெருமானுடைய தில்லை அன்ன
 இப்புனத்தார்கள், ஒன்று,  "விருந்தினரோடு பேசுதல் கூடாது" என்ற விரதம்
 உடையவர் ஆதல் வேண்டும்; இன்றேல்,  தம்வாயைத் திறந்தால் முத்துக்கள்
 சலக்கு என்ற ஓசையோடு உதிர்ந்துவிடும் என்று கருதுபவர் ஆதல்
 வேண்டும்.]

திருக்கோவை. 59

 எனவும்,

     இடைவினாதல்:

 "கலைக்கீழ் அகல்அல்குல் பாரம்அது ஆரம்கண் ஆர்ந்துஇலங்கும்
  முலைக்கீழ்ச் சிறிதுஇன்றி நிற்றல்முற் றாதுஅன்று இலங்கையர்கோன்
  மலைக்கீழ் விழச்செற்ற சிற்றம் பலவர்வண் பூங்கயிலைச்
  சிலைக்கீழ்க் கணைஅன்ன கண்ணீர் ஏதுநுங்கள் சிற்றிடையே"

     [மேகலையின்கீழ் அல்குல்உளது; முலைக்குகீழ் அல்குலுக்கு மேல்
 சிறிதாவது இடம்இல்லாது இணைதல் இயலாது. இராவணன் ஆற்றலை
 ஒடுக்கிய சிவபெருமானுடைய கயிலையிலே, வில்லின் கீழ்உள்ள
 அம்புபோன்ற கண்ணீர்! "நும் சிறிய இடை எது?" என்பதைக் கூறுங்கள்.]