உரைத்தது உரையாது கருத்து அறிவித்தல்:
"வில்நிற வாள்நுதல் வேல்நிறக் கண்மெல் லியலைமல்லல்
தன்நிறம் ஒன்றில் இருத்திநின் றோன்தனது அம்பலம்போல்
மின்நிற நுண்இடைப்பேரெழில் வெண்நகைப்பைந்தொடியீர்
பொன்நிற அல்குலுக்கு ஆமோ மணிநிறப் பூந்தழையே".
எனவும் வரும். பிறவும் அன்ன.
["வாள்நுதல் வேற்கண் பார்வதியைத் தன் மேனியில் இருத்தி நின்ற சிவபெருமானது அம்பலம்போல, ஒளிவீசும் நுண்இடைப் பேர்எழில் வெண்முறுவல் மகளிரே! யான் கொண்டுவந்துள்ள இத்தழையாடை நுமக்கு அணிதற்கு ஏற்குமோ?" என்று கூறுங்கள்.]
யாரே இவர் மனத்து எண்ணம் யாது எனத்தேர்தல்:
"பல்லிலன் ஆகப் பகலைவென் றோன்தில்லை பாடலர்போல்
எல்லிலன் நாகத்தொடுஏனம் வினாவுஇவன்யாவன் கொலாம்
வில்லிலன் நாகத் தழைகையில் வேட்டைகொண் டாட்டம்மெய்ஓர்
சொல்லில னாகற் றவாகட வான்இச் சுனைப்புனமே".
[பகலைப் பல் உகுத்த சிவபெருமானுடைய தில்லையைப் பாடாதவரைப்போல ஒளி இழந்து, யானையும் பன்றியும் வந்த வழியை வினாவும் இவன், இப்புனத்தைக் கடவானாய்க் கையில் வில் இன்றித் தழை ஏந்தி வேட்டைக்கு வந்தவனாக உண்மை ஏதும் உரையானாய் உளான். இவன் யாவனோ?]
"ஆழம்மன் னோஉடைத்து இவ்வையர் வார்த்தை அநங்கன்நைந்து
வீழமுன் நோக்கிய அம்பலத் தான்வெற்பின் இப்புனத்தே
வேழம்முன் னாய்க்கலை யாய்ப்பிற வாய்ப்பின்னும் மென்தழையாய்
மாழைமென் நோக்கி இடையாய்க் கழிந்தது வந்துவந்தே".
|
|
|
|