[இத் தலைவன் சொற்கள் ஆழமுடையன. மன்மதனை எரித்த அம்பலத்தான் மலையைச்சார்ந்த இப்புனத்தில் இவன் சொற்கள் யானையில் தொடங்கி மானாகிப் பிறவாகிப் பின் தழையாகி இறுதியில் இத்தலைவியின் இடையாய் வந்து முடிந்துவிட்டது.]
இருவரும் உள்வழி ஒருமையின் தலைவன் கையுறை ஏந்திச் சேறல்:
"தண் தாமரைமலர்ப்பொன்னையும்பார்மங்கைதன்னையும்போல்
வண்டுஆர் குழல்மடவார் மணந்தார் சென் றுவாணன் தஞ்சை
நுண் தாது அணிபொங்கர் நீழலின் கீழ்இந்நுடங்கிடையார்க்
கண்டுஆ தரவைஎல் லாம்சொல் லவேநல்ல காலம்இதே".
[தஞ்சை வாணன் சோலையிலே திருமகளும் நிலமகளும் போலத் தலைவியும் தோழியும் சேர்ந்து உள்ளனர் ஆதலின், அவர்களைக் கண்டு என் விருப்பத்தைக் கூற இஃது ஏற்ற செவ்வியாகும்.]
கையுறை ஏந்திநின்று அவ்வகை வினாதல்:
"தழைக்கின்றசந்தனம்தண்ணறுஞ்சாரல்தவழும்கொண்டல்
மழைக்குன்ற வாணர் மடவிய ரேநும் மலர்க்கண்களால்
உழைக்கன்றையும்மொழியால்ஒருகோடிப்பைங்கிள்ளையையும்
அழைக்கின்ற உங்களை யோபுனம் காவலர் ஆக்குவதே".
[சந்தனச் சாரலிலே மேகம் தவழும் குன்றவர் மகளிரே! நும் கண்களால் மான் கன்றையும் மொழியால் கிளிகளையும் அழைக்கின்ற உங்களையோ, மானையும் கிளியையும் கடிதற்கு உரிய தினைப்புனத்தில் காவலாக வைப்பது?]
|
|
|
|