362                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     மான் ஆகிவிட்டது. இன்னும்கேட்டால் குறுமுயல் ஆகவும் கூடுமோ?
 என்ன வியப்பு! உலகில் அம்பு எய்வதில் இவரை ஒப்பார் ஒருவரும் இரார்.]

     மதியினின் அவர் அவர் மனக்கருத்து உணர்தல்:

    "ஏனல் காவல் இவளும் அல்லள்
     மான்வழி வருகுவன் இவனும் அல்லன்
     நரந்தங் கண்ணி இவனோடு இவளிடைக்
     கரந்த உள்ளமொடு கருதியது பிறிதே
     நம்முன் நாணுநர் போலத் தம்முள்
     மதுமறைந்து உண்டோர் மகிழ்ச்சி போல
     உள்ளத்து உள்ளே மகிழ்ப
     சொல்லும் ஆடுப கண்ணி னானே".

தொல். பொ.

 எனவும்,

     [இவள் தினைக்காவல் புரிவாளும் அல்லள்; இவன் மான் தப்பிச்சென்ற
 வழியைத் தேடி வருவானும் அல்லன். இவனும் இவளும் தம் மறைந்த
 உளத்தோடு கருதியது வேறு ஒன்றாகும். என்முன் நாணுவார்போல உளர்.
 ஆனால் மறைத்துக் கள்ளினை உண்டார் களிப்பு உள்ளத்துள்ளே யாவது
 மயக்கம் தருவதுபோல உள்ளேயே மகிழ்கின்றனர். தம் கண்களால்
 பேசிக்கொள்வதும் செய்கின்றனர்.]

     இவற்றுள், நாற்றம் முதலிய ஏழானும் ஐயமுற்று ஓர்தலும், அவ்வகை
 தன்னால் ஐயம் தீர்தலும், மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது
 பல்வேறு கவர்பொருள் சொல்லின் ஆடலும், என்னும் மூன்றும் முன்னுற
 உணர்தற்கும், கண்ணியும் தழையும்ஏந்தி நண்ணி ஊர்பெயர் கெடுதியோடு
 ஒழிந்தவும் வினாவுழி "யாரே இவர்? மனத்து எண்ணம் யாது?"
 எனத்தேர்தலும் எண்ணம் தெளிதலும் என்னும் இரண்டும் குறையுற
 உணர்தற்கும், கையுறை ஏந்தி நின்று அவ்வகை வினாவுழி எதிர்மொழி
 கொடுத்தலும்,