"பெட்ட வாயில்பெற்று இரவுவலி யுறுப்பினும்
ஊரும் பேரும் கெடுதியும் பிறவும்
நீரில் குறிப்பின் நிரம்பக் கூறி
தோழியைக் குறையுறும் பகுதியும்
அறிந்தோன் அயர்ப்பின் அவ்வழி மருங்கின்
கேடும் பீடும் கூறலும் தோழி
நீக்கலின் ஆகிய நிலைமையும் நோக்கி
மடல்மாக் கூறும் இடனுமார் உண்டே "