47 தன் உயிர்ப்பாங்கி தன்பொருட்டாகிய செயல் எதற்கும் தன்னைக் கேட்கவேண்டிய இன்றியமையாமை இல்லை என்று கூறித் தலைவி பாங்கியைச் சினந்து கூறுதல்.
48 பாங்கி கொணர்ந்த கையுறையைத் தலைவி ஏற்றுக் கோடல்.
49 தலைவி கையுறை ஏற்ற செய்தியைப் பாங்கி தலைவனுக்குக் கூறுதல்.
50 பாங்கி, தலைவியைக் காண்பதற்கு ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தலைவனுக்குக் கூறுதல்.
51 பாங்கி, குறிஇடத்திற்குத் தலைவியை அழைத்துக் கொண்டு சேர்தல்.
52 தலைவியைக் குறியிடத்திற்குச் செலுத்திவிட்டுப் பாங்கி மலர் கொய்து வருவதாகக் கூறித் தான் நீங்குதல்.
53 தலைவன் குறியிடத்தில் தலைவியைச் சந்தித்தல்.
54 இருவரும் புணர்ச்சியின் மகிழ்தல்.
55 தலைவன் தலைவியைப் புனைந்து உரைத்தல்.
56 தலைவன் தலைவியைப் பாங்கிபால் செல்லுமாறு விடுத்தல்.
57 பாங்கி தலைவியைச் சார்ந்து தான் பறித்துவந்த பூக்களைக் காட்டுதல்.
58 பாங்கி தலைவியை ஆயவெள்ளத்திடைச் சேர்த்தல்.
59 தலைவியை எப்பொழுதும் பாதுகாக்கவேண்டும் என்று தலைவனுக்குப் பாங்கி சொல்லுதல்.
60 ஊர்திரும்பஇருந்த தலைவனை நோக்கி "விருந்துஉண்டு செல்க" என்று பாங்கி செலவு
61 விருந்தினனாய்த் தங்குதலைத் தலைவன் விரும்புதல்.
|
|
|
|