இறை. அக. 8
"உள்ளத்து உணர்ச்சி தெள்ளிதின் கரந்து
கிழவோள் தேஎத்துக் குறையுறூஉம் உளவே
குறிப்புஅறி வுறூஉம் காலை யான ". 10
"தன்னுள் குறிப்பினை அருகும் தோழிக்கு
முன்னுறு புணர்ச்சியின் அருகலும் உண்டே ". 11
"குறையுறும் கிழவனை உணர்ந்த தோழி
சிறையுறக் கிளந்து சேட்பட நிறுத்தலும்
என்னை மறைத்தது எவனா கியர்என
முன்னுறு புணர்ச்சி முறைமுறை செப்பலும்
மாயப் புணர்ச்சி அவனொடு நகாஅ
நீயே சென்று கூறுஎன விடுத்தலும்