"குறையுறு புணர்ச்சி தோழி தேஎத்துக்
கிழவிக்கு இல்லை தலைப்பெயல் ஆன ". 13
"ஆற்றாது உரைத்தல் உலகின்மேல் வைத்தல்
தன்துணிபு உரைத்தலொடு மடல்வகை உரைத்தல்
அருளால் அரிதுஎனல் நடையால் அரிதுஎனல்
அவயவம் எழுதல் அரிதுஎன விலக்கல்
உடன்படாது விலக்கல் உடன்பட்டு விலக்கல்
இடம்பட ஒன்பதும் செப்புங் காலை
வடம்படு முலைமேல் மடலா கும்மே ".
திருக்கோவை, மு. வீ. கள. 15
"குறிப்புஅறி தலோடு மென்மொழி கூறல்
விரவிக் கூறல் அறியாள் போறல்
வஞ்சித்து உரைத்தல் புலந்து கூறல்
வன்மொழி கூறல் மனத்தொடு நேர்தல்
சொன்ன இருநான்கும் துறைகுறை நயப்புஎன
மன்னிய பொருளில் வகுத்திசி னோரே ". 16
"தழைகொண்டு சேறல் தகாதுஎன மறுத்தல்
நிலத்துஇன்மை கூறல் நினைவுஅறிவு கூறல்
படைத்து மொழிதலொடு பனிமதி நுதலியை
எடுத்துநாண் உரைத்தல் இசையாமை கூறல்
செவ்வியிலள் என்றல் சேட்பட நிறுத்தல்
அவ்வினிய மொழிநீ அவட்குஉரை என்றல்
குலமுறை கிளத்தல் கோதண் டத்தொழில்
வலிசொல்லி மறுத்தல் மற்றவர்க்கு இரங்கல்
சிறப்பின்மை கூறல் சிறியள்என்று உரைத்தல்