மறைத்தமை கூறி நகைத்துஉரை செய்தல்
நகைகண்டு மகிழ்தல் நான்அவள் தன்னை
அறியேன் என்றல் அவயவம் கூறல்
கண்நயந்து உரைத்தல் கையுறை எதிர்தல்
முகம்புக உரைத்தல் முகம்கொண்டு கூறல்
வகுத்துரைத் தல்லொடு வண்தழை அவட்கு
மிகுத்துரை செய்து விரும்பிக் கொடுத்தல்
தழைவிருப்பு உரைத்தல் தானிரு பத்தாறு
இழைவளர் முலையாய் இவைசேட் படையே".
திருக்கோவை, மு. வீ கள. 17.
முழுதும் - ந. அ 144, -150-ஆம் நூற்பாக்கள்.
"குலமகன் உட்கோள் கூறலும் பாங்கி
குலமுறை கிளத்தலும் குலமகன் கிழத்தி
தன்னை உயர்த்தலும் மின்இடைச் சேடி
விளங்கா தவள்போல் வினாதலும் வேந்தன்
தலைவி தன்னைச் சாற்றலும் தாதி
இறைவி அருமை இயம்பலும் இறைவன்
இன்றியமை யாமை இயல்பலும் இகுளை
நின்குறை நீயே சென்றுஉரை என்றலும்
இகுளையை இறைவன் இகழ்தலும் இகுளை
காதலி மடமை கழறலும் காதலன்
மூதறி வுடைமை மொழிதலும் தோழி
முன்னுறு புணர்ச்சி முன்னத்தின் மொழிதலும்
தன்னிலை மன்னன் சாற்றலும் தோழி
உலகுஒழுக்கு உணர்த்தலும் தலைமகன் மறுத்தலும்
தோழி அஞ்சிஅச் சுறுத்தலும் வாழி
கையுறை புகழ்தலும் மொய்யிழை மறுத்தலும்
ஆற்றா நெஞ்சினோடு அவன்புலத் தலும்அவள்
ஆற்றுவித்து ஏகலும் ஆகும்ஐ நான்கும்
இரந்துபின் நிற்றல் சேட்படை இரண்டற்கும்
நிரந்தன என்ப நெறியுடை யோரே". மா. அ. 36