அகத்திணையியல்-நூற்பா-137                              377


 

    "பாங்கி இறைவன் பருவரல் உணர்த்தலும்
     உள்ளம்வே றாதலை உள்ளி உரைத்தலும்
     தலைவியை முனிதலும் தலைவி பாங்கியை
     வெய்துற முனிதலும் கையுறை ஏற்றலும்
     வலிதாகச் சொல்லிக் குறைநயப் பித்தற்கும்
     மெலிதாகச் சொல்லி மேவற்கும் உரிய".

மா. அ. 40 

   "கற்புடைத் தையல் கையுறை ஏற்றமை
    கொற்றவற்கு இகுளை குறிப்புற நிகழ்த்தலும்
    குறியிடம் கூறலும் கொண்டு சேறலும்
    இடத்துஉய்த்து நீங்கலும் இறைஎதிர்ப் படுதலும்
    புணர்தலும் புகழ்தலும் புனைந்துற விடுத்தலும்
    இணர்கொடு பாங்கிமெல் லியலைச் சார்ந்து
    கையுறை காட்டலும் பாங்கிற் கூட்டலும்
    பையர வல்குலை நீங்கிப் பார்த்திபற்கு
    ஓம்படை சாற்றலும் உலகியல் ஆம்படி
    விருந்து விலக்கலும் விருந்துஇறை மருந்துஎன்று
    அருந்தலும் ஆகிய அறைந்தபன் மூன்றும்
    கூட்டல் வேட்டல் முதல்ஈறு ஆக
    இகுளைக்கு விதித்தஈ ரிரண்டற்கும் உரிய"           மா. அ. 41

                                                      

   "அழகுற உணர்த்தும்இவ் வறுபான் மூன்றும்
    குழகுஅமர் பாங்கியின் கூட்டத்து விரியே".                " 42]

    தலைவன் உட்கோள் சாற்றல்:

 "மடுக்கோ கடலின் விடுதிமில் அன்றி மறிதிரைமீன்
  படுக்கோ பணிலம் பலகுளிக் கோபரன் தில்லைமுன்றில்
  கொடுக்கோவளைமற்று நும்ஐயர்க்குஆயகுற்றேவல்செய்கோ
  தொடுக்கோ பணியீர் அணிஈர் மலர்நும் சுரிகுழற்கே".
                                                திருக்கோவை 63

 எனவும்,
    48