[கடலில் மீன்பிடிக்கும் படகைச் செலுத்துவேனோ, அன்றி மீன்  பிடிப்பேனோ,
 முத்துக் குளிப்பேனோ, அரன்தில்லை முன்றிலில் உங்களுக்கு  வளைகளுக்காகச் சங்குகளைக் 
கொணர்ந்து கொடுப்பேனோ? உம்  அண்ணன்மார் இடும் குற்றேவல்களைச் செய்வேனோ? உங்கள் கூந்தலில்
  சூட்டிக் கொள்ளப் பூக்களைத் தொடுப்பேனோ? கூறுவீர்களாக]      பாங்கி குலமுறை கிளத்தல்:
 
	    "தெங்கம் பழம்கமு கின்குலை சாடிக் கதலிசெற்றுக் 
	     கொங்குஅம்பழனத்துஒளிர்குளிர் நாட்டினைநீஉமைகூர் 
	     பங்குஅம் பலவன் பரங்குன்றில் குன்றன்ன மாபதைப்பச் 
	    சிங்கம் திரிதரு சீறூர்ச் சிறுமிஎம் தேமொழியே "	
  
	     	 	
	     [தேங்காய், கமுகுக்குலைகளை மோதி வாழைக் கனிகளைத் தாக்கி  வயலில் விழும் 
மருதநிலத்தினன் நீ; சிவபெருமானுடைய பரங்குன்றில்  யானைகள் நடுங்கச் சிங்கம் திரியும் சீறூர்ச் சிறுமி எம் தலைவி.]      தலைவன் தன்னை உயர்த்தல்: 
    "மாடம்செய் பொன்நக ரும்நிகர் இல்லைஇம் மாதர்க்குஎன்னப் 
     பீடம்செய் தாமரை யோன்பெற்ற பிள்ளையை உள்ளலரைக் 
     கீடம்செய்து என்பிறப் புக்கெடத் தில்லைநின் றோன்கயிலைக் 
     கூடம்செய் சாரல் கொடிச்சிஎன் றோநின்று கூறுவதே "
  
 எனவும், 
	     [தன்னை நினையாதவர்களைப்  புழுப்போலத் துடிக்கச்செய்து, என்பிறவித் துயரைப் 
போக்கிய தில்லையான்  கயிலைச்சாரலில், தேவர் உலகத்தாரும் தனக்கு நிகரில்லை என்னுமாறு  பிரமனால் 
படைக்கப்பட்ட இத்தலைவியைக் குறிஞ்சிநிலப் பெண் என்று  குறைவாகப் பேசலாமா?]
	 
 |  
 
  |  
  
				
							 | 
						 
					 
				 |