[தலைவனே! "தகரம் மகிழ் முதலிய நறுமண மரங்களை வெற்றுப் புதர்  போலக் கொண்டு வெட்டிஎறிந்து அவ்விடத்தை உழுது தினை விதைப்பார்  மரபில் வந்துள்ள தலைவி பிறர் துன்பம் கண்டு மனம் நோகும் இயல்பினள்  ஆவளோ?" என்பதனை ஆராய்ந்து பார்]
 
	     காதலன் தலைவி மூதறிவுடைமை மொழிதல்:
 
	    "அணங்குஉடைப் பனித்துறைத் தொண்டி அன்ன 
	     மணம்கமழ் பொழில்குறி நல்கினள் நுடங்குஇடைப் 
	     பொங்குஅரி பரந்த உண்கண் 
	     அம்கலுழ் மேனி அசைஇயல் எமக்கே"  
 எனவரும். 
     [அசையும் இடை, அரிபரந்த உண்கண், அழகுஒழுகும் மேனி, தளர்ந்த  இயல் இவற்றை உடைய தலைவி, தெய்வம் தங்கும் குளிர்ந்த துறையை  உடைய தொண்டி என்ற ஊரைப் போல நறுமணங்கமழும் பொழிற்கண்  எனக்குக் குறிவாய்ப்ப அருளினாள்.]
	 
     பாங்கி முன்னுறு புணர்ச்சி முறை உறக் கூறல்:
 
	    "நறுந்தண் கூந்தல் குறுந்தொடி மடந்தை 
	     சிறுமுதுக் குறைவி ஆயினள் பெரிதுஎன 
	     நின்எதிர் கிளத்தலும் அஞ்சுவல் எனக்குஎன 
	     இன்உயிர் அன்னள் ஆயினும் 
	     தன்உறு விழுமம் காத்த லானே".	
  
 எனவரும்.
 
     [தண்கூந்தலாளாகிய குறுந்தொடி மடந்தை எனக்கு உயிர் போலச்  சிறந்தனளாயினும் தனக்குவந்த துயரத்தைத்தானே காத்துக் கோடலான்,  இளமையிலேயே பேரறிவு படைத்துவிட்டாள் என்பதை உன்னிடம் கூறுதற்கு   அஞ்சுகிறேன்.  
 |   
  |  
  
				
							 | 
						 
					 
				 |