அகத்திணையியல்-நூற்பா-137                              385


 

     ஆங்கு அவன் கையுறை புகழ்தல்:

    "வில்லும் பிறையும் திறையிடும் வாள்நுதல் மெல்லியலாய்
     எல்லும் குமுத மலரும்கண் டால்இருங் கோங்குஅரும்பும்
     வல்லும் பொருத வனமுலைக்கு ஆன மணிஇதுபேர்
     சொல்லும் பொழுது பிரமனும் மாலும் தொழத்தகுமே".

அம்பி 141 

 எனவும்,

     [வில்லையும் பிறையையும் ஒத்த நுதலாய்! குமுதம் கண்டால் மலரும்
 எனத்தக்க ஒளியுடையதாய், பிரமனும் மாலும் போற்றத்தக்க இம்மணி,
 கோங்கரும்பும் வில்லும் ஒத்த தலைவியின் வனமுலைக்கு வனப்புத்
 தருவதாகும்.]

     தையல் மறுத்தல்:

 "ஆரத் தழைஅராப் பூண்டுஅம் பலத்துஅன லாடிஅன்பர்க்கு
  ஆரத் தழைஅன்பு அருளிநின் றோன்சென்ற மாமலயத்து
  ஆரத் தழைஅண்ணல் தந்தா லிவைஅவள் அல்குல்கண்டால்
  ஆர்அத் தழைகொடு வந்தார் எனவரும் ஐயுறவே".

திருக்கோவை. 91 

 எனவும்,

     [அண்ணலே! பாம்பு பூண்டு அம்பலத்தில் அனல்ஆடி அடியார் தமக்கு
 மிக்கஅன்பு அருளும் சிவபெருமானுடைய மலையமலையின் சந்தனத்
 தழையை நீ தர, அதனைத் தலைவி உடுப்பதைக் கண்டால், அத்தழை
 கொடுத்தவர் யாவர் என்ற ஐயுறவு ஏற்பட்டுவிடும்]

     ஆற்றா நெஞ்சினோடு அவன்புலத்தல்:

    "கடுந்தேர் ஏறியும் காலில் சென்றும்
     கொடுங்கழி மருங்கின் அடம்பமலர் கொய்தும்

        49