கைதை தூக்கியும் நெய்தல் குற்றும்
புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடு
வைகலும் இனையம் ஆகவும் செய்தார்ப்
பசும்பூண் வேந்தர் அழிந்த பாசறை
ஒளிறுவேல் அழுவத்துக் களிறுபடப் பொருத
பெரும்புண் உறுநர்க்குப் பேஎய் போலப்
பின்னிலை முனியா நம்வயின்
என்என நினையுங்கொல் பரதவர் மகளே".
[தேர்ஏறி வந்தும், பின் அதனை நிறுத்திக் காலால் நடந்துவந்தும், இவள்பொருட்டு அடம்பமலர் கொய்தும், தாழம்பூப் பறிக்குமாறு இவளைத் தூக்கிக்கொண்டும், ஆடைக்கு நெய்தல்தழையும் சூடற்கு நெய்தற்பூவும் பறித்துக் கொடுத்தும், இவளோடு நட்புக் கொண்டது போன்ற மகிழ்ந்த மனத்துடன் நாள்தோறும் யான் தோழியாகிய இவளை இவள்மனம் நெகிழும்வரை சுற்றித்திரியவும், அரசர் பாசறையில் யானையொடு பொருது புண்பட்டுக் கிடக்கும் வீரர்க்கு அவர்உயிர் போம்துணையும் நாயும் நரியும் கழுகும் அவரைத் தீண்டாதவாறு பாதுகாக்கும் பேய் அவரைச் சுற்றித் திரிவதுபோல இவள்மனம் நெகிழும்வரை இவளைச் சுற்றித்திரியும் என்னைப் பரதவர் மகளாகிய தலைவி இவன் எனக்கருதினன்?" என்று நினைப்பாளோ?]
அவள் ஆற்றுவித்து அகற்றல்:
"யாழார் மொழிமங்கை பங்கத்து இறைவன் எறிதிரைநீர்
ஏழாய் எழுபொழி லாய்இருந் தோன்நின்ற தில்லைஅன்ன
சூழ்ஆர் குழல்எழில் தொண்டைச்செவ் வாய்நவ்வி சொல் அறிந்தால்
தாழாது எதிர்வந்து கோடும் சிலம்ப தரும்தழையே".
|
|
|
|