ஈசன சாந்தும் எருக்கும் அணிந்துஓர் கிழிபிடித்துப்
பாய்சின மாஎன ஏறுவர் சீறூர் பனைமடலே".
திருக்கோவை. 74
[வேற்கண் வலைப்பட்டு உள்ளமாகிய மீனை இழந்தவர்கள் சிவபெருமான் பூசும் சாம்பலைப் பூசி, எருக்கமாலை அணிந்து, தம் மனத்தைக் கொண்டவளது வடிவத்தை ஒரு துணியில் எழுதிப் பனங்கருக்கால் செய்யப்பட்ட குதிரையை ஏறிச் சீறூர்க்கண் மடல் ஊர்வர்.]
"மாஎன மடலும் ஊர்ப பூஎனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகில் ஆர்க்கவும் படுப
பிறிதும் ஆகுப காமம்காழ்க் கொளினே".
பிறிதும் ஆகுப என்றது வரைபாய்தலை.
[காமம் மிகுவதாயின், அவர்கள் மா என்று சொல்லி மடல்ஏறி, எருக்கங்கண்ணி சூடி ஊரவர் ஆரவாரிக்கப் பனைமடல்மா ஊர்ந்து வருவதோடு, வரைபாய்தலுக்கும் உளம் கொள்வர்.]
மடலேற்றினைத் தலைமகன் தன்மேல்வைத்துச் சாற்றல்:
"கழிகின்ற என்னையும் நின்றநின் கார்மயில் தன்னையும்யான்
கிழிஒன்ற நாடி எழுதிக்கைக் கொண்டுஎன் பிறவிகெட்டுஇன்று
அழிகின்றது ஆக்கிய தாள்அம் பலவன் கயிலைஅந்தேன்
பொழிகின்ற சாரல்நும் சீறூர்த் தெருவிடைப் போதுவனே".
|
|
|
|