அகத்திணையியல்-நூற்பா-137                              389


 

     [என் பிறவிப்பிணியைப் போக்கும் அம்பலவன் கயிலையை அடுத்த
 மலைப்பக்கத்துள்ள உம் சீறூரின்கண், உயிர்போய்க் கொண்டிருக்கும்
 என்படத்தையும் உன் தலைவிபடத்தையும் ஒரே துணியில் சேர்த்து எழுதிக்
 கைக்கொண்டு மடலூர்ந்து வருவேன்.]

     தலைமகள் அவயத்து அருமை பாங்கி சாற்றல்:

 "அடிச்சந்தம் மால்கண் டிலாதன காட்டிவந்து, ஆண்டுகொண்டு, என்
  முடிச்சந்த மாமலர் ஆக்கும்முன் னோன்புலி யூர்புரையும்
  கடிச்சந்த யாழ்கற்ற மென்மொழிக் கன்னி அனநடைக்குப்
  படிச்சந்தம் ஆக்கும் படம்உள வோநும் பரிசுஅகத்தே".

திருக்கோவை. 78. 

 எனவும்,

     [திருமால் காணமுடியாத திருவடிகளை என் தலைக்குப் பூக்களாகஆக்கி
 என்னை ஆட்கொள்ளும் சிவபெருமானுடைய புலியூரை ஒத்த இன்மொழித்
 தலைவியின் அன்னநடையை நீர் துணியில் எழுதுவதற்கு வாய்ப்பு
 இல்லையே!]

     தலைமகன் தன்னைத்தானே புகழ்தல்:

 "காரார் கொடைத்தடக் கைக்கரு மாணிக்கன் கப்பல்வெற்பின்
  நேராக நீர்கொண்ட நெஞ்சுதந் தால்அந்த நெஞ்சுகொண்டே
  ஏர்ஆர் திருஉரு எல்லாம் எழுத வரும்எனக்கு
  வாரா திருப்பதுஐ யோமட வீர்உங்கள் வன்கண்மையே"

கப்பல். 90. 

 எனவும்,

     [கார்மேகம்போன்ற கொடைக் கையையுடைய கருமாணிக்கனுடைய
 கப்பல்நகரைச் சார்ந்த மலையில் நீங்கள் என்னிடம்இருந்து
 கைப்பற்றிக்கொண்ட என்மனத்தை மீளவும் திருப்பித் தந்தால்,
 அதனைக்கொண்டு யான் தலைவியின் உருவ நலன்களை எல்லாம் கிழியில்
 எழுதவல்லேன். உங்கள் கல்மனம் ஒன்றே எழுதுதற்கு அரிது.]